Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்து வீசாத பும்ரா… வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா!

vinoth
ஞாயிறு, 5 ஜனவரி 2025 (07:15 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இதன் மூலம் ஆஸி அணிக்கு இலக்காக 162 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்களை இழந்துள்ளது. ஆஸி அணி வெற்றிபெற இன்னும் 91 ரன்கள் தேவை. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா இந்த இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அது இந்திய அணிக்குப் பெரும்பின்னடைவாக அமைந்துள்ளது,

இரண்டாம் நாளின் போது பும்ரா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. பின்னர் இன்று அவர் பேட் செய்ய வந்தாலும் காயத்தின் தன்மை காரணமாக அவரை பந்துவீச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சீரிஸில் அதிக விக்கெட் எடுத்த பவுலராக பும்ரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மொத்தம் 32 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பிட்ச்சை மாடுகள் பார்த்திருந்தால் மேயத் தொடங்கியிருக்கும்… கவாஸ்கர் கடுமையான விமர்சனம்!

வடிவேலு போல பாக்கெட்டை வெளியே எடுத்துக் காட்டிய கோலி.. ஆஸி ரசிகர்களோடு தொடரும் மோதல்!

157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஆஸி அணிக்கு எளிய இலக்கு!

ஆஸ்திரேலியாவை விட 145 ரன்கள் முன்னிலை! திரும்ப வருவாரா பும்ரா? நாளை என்ன நடக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments