Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியின் பெருமையை முடிவுக்கு கொண்டு வந்த பென் ஸ்டோக்ஸ்! – புதிய சாதனை!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (11:36 IST)
உலகின் தலைசிறந்த வீரருக்கான விஸ்டன் புக் ரெக்கார்டில் இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கிரிகெட்டிற்கான பைபிள் என்றழைக்கப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வழங்கி சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராக பென் ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். அந்த உலக கோப்பை தொடரின் சாதனை நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரிலும் இவரது ஆட்டம் பலரால் பாரட்டப்பட்டது.

இந்நிலையில் 2020ம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என்ற கௌரவத்தை விஸ்டன் புத்தகம் வழங்கியுள்ளது. இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விருதை தொடர்ந்து பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியிருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments