தோனி, அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதி..! பிசிசிஐ அறிவித்த புதிய விதி

vinoth
ஞாயிறு, 29 செப்டம்பர் 2024 (05:44 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வருகின்றன. அணிகள் நான்குக்கும் மேற்பட்ட வீரர்களை தக்கவைக்க உரிமை அளிக்க வேண்டும் என பிசிசிஐயிடம் அழுத்தம் கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான். அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது.

இந்நிலையில்தான் பிசிசிஐ ஒரு புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. அதன் படி சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்மூலம் தோனி அன்கேப்ட் பிளேயர் ஆகிறார். இதனால் அவரைக் குறைந்த தொகையான 4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்த விதியால் தோனி கிட்டத்தட்ட அடுத்த சீசனில் ஆடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

2வது திருமணத்தை உறுதி செய்த ஷிகர் தவான்.. அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிபவர் தான் மணமகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments