Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கில்லுக்கு மாற்றுவீரராக ருத்துராஜ் அல்லது ஜெய்ஸ்வால்?... பிசிசிஐ முடிவு?

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (07:20 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா – இந்தியா ஆட்டத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டிகளுக்குள் அவர் குணமாகி வர வேண்டும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்து நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டையணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று மாலையே அவர் ஹோட்டலுக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஷுப்மன் கில் குணமாக குறைந்தது ஒரு வாரம் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதால், அவருக்கு மாற்று வீரராக ருத்துராஜ் கெய்க்வாட் அல்லது யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments