Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் முதல்ல இருந்தா?... சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பிசிசிஐ?

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (11:56 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தையும் லாகூர் மைதானத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்தியா vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs நியுசிலாந்து அணிகள் ஆகிய போட்டிகளை பிப்ரவரி 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கையில் நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

185 ரன்களுக்குள் சுருண்ட இந்திய அணி.. ஸ்காட் போலண்ட் அபாரம்!

ரோஹித் ஒன்றும் GOAT இல்லை… அவரை நீக்கியதை மறைக்கத் தேவையில்லை- முன்னாள் வீரர் கருத்து!

ரோஹித்தை நீக்கியுள்ளார்கள்.. அதை ஏன் வெளியில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.. கிண்டல் செய்த ஆஸி வீரர்!

5வது டெஸ்ட் போட்டியிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. 8 விக்கெட்டுக்கள் காலி

46 ஆண்டுகால ஏக்கம்… சிட்னி மைதானத்தில் சாதனைப் படைக்குமா பும்ரா தலைமையிலான அணி?

அடுத்த கட்டுரையில்
Show comments