சில மணிநேரங்களில் பறிபோனது இந்தியாவின் முதல் இடம்… மீண்டும் முதலிடத்தில் ஆஸி!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:28 IST)
இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி 20 கிரிக்கெட் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் முதல் இடம் பிடித்து இந்திய அணி சாதனைப் படைத்தது. டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 114 புள்ளிகளோடும், ஆஸி 111 புள்ளிகளோடும் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.

ஆனால் அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆஸி அணி 126 புள்ளிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு, முதல் இடத்துக்கு முன்னேறியது. தற்போது இந்திய அணி மீண்டும் இரண்டாம் இடத்துக்கு சென்றுள்ளது. அடுத்தடுத்து ஆஸியோடு நடக்கும் போட்டிகளை வென்றால் இந்திய அணி முதலிடத்துக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments