Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூலிழையில் பறிபோன வெற்றி.. அதிரடி வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (18:38 IST)
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய முதல் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.



உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் வகையில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களான டேவிட் வார்னர் (81), ட்ராவிஸ் ஹெட் (109)கூட்டணியின் கலக்கலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 49வது ஓவர் முடிவிலேயே மொத்த விக்கெட்டை இழந்தாலும் 388 என்ற பெரிய இலக்கை நியூசிலாந்துக்கு வைத்தது ஆஸ்திரேலியா.

ஆரம்பத்தில் நியூசிலாந்து சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தது. ரச்சின் ரவீந்திரா (116), மிட்செல் (54) கூட்டணி நன்றாக விளையாடி வந்தது. ஆனால் இந்த விக்கெட்டுகளுக்கு பிறகு அணியின் ஸ்கோர் லெவல் குறைய தொடங்கியது. எனினும் இறுதி வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் நீஸம் (58) அபாரமாக விளையாடி அணியை வெற்றி வாய்ப்பை நோக்கி மிக அருகில் செலுத்தினார். 49.5 வது பந்தில் எதிர்பாராத விதமாக அவர் விக்கெட்டை இழந்தார். 1 பந்தில் 6 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற அளவு நெருங்கி வந்த நியூஸிலாந்து அந்த ரன்களை பெற முடியாமல் நூல் இழையில் தோல்வியை தழுவியது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

சி எஸ் கே அணியில் இருந்து விலகிய டுவெய்ன் பிராவோ… ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments