Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் பவுலிங்கில் திணறும் ஆஸ்திரேலியா; மாஸ் காட்டும் ஜட்டு!

Webdunia
ஞாயிறு, 8 அக்டோபர் 2023 (16:45 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வருகிறது.



டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியாவை இந்தியா கட்டுப்படுத்தி வருகிறது. ஆரம்பமே மிட்ஷெல் மார்ஷ் விக்கெட்டை பும்ரா தூக்கிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தும், வார்னரும் ஜாக்கிரதையாகவே விளையாடி வந்தனர்.

அடுத்து வார்னர் விக்கெட்டை குல்தீப் யாதவ் வீழ்த்த, அதற்கடுத்து பவுலிங்கில் இறங்கிய ஜடேஜா ஆஸ்திரேலியாவின் ஹிட்மேன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை தூக்கினார். அத்தோடு நில்லாமல் அடுத்தடுத்து லம்பாஷ்னே, அலெக்ஸ் கேரி விக்கெட்டுகளையும் ஜட்டு காலி செய்தார்.

தற்போது 30 ஓவர்கள் தாண்டிய நிலையில் 125 ரன்கள் மட்டுமே ஈட்டி 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தள்ளாட்டத்தை சந்தித்துள்ளது. 250 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை மடக்கினால் இந்தியாவிற்கு அது மிகவும் எளிய இலக்காகவே இருக்கும். முதல் வெற்றியுடன் இந்தியா உலகக்கோப்பையை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

துப்பாக்கிய பிடிங்க வாஷி… உங்க பேச்சுதான் பெஸ்ட்டு… அஸ்வின் நெகிழ்ச்சி!

கோலி மட்டும் கேப்டனாக இருந்தால் அஸ்வினை விட்டிருக்க மாட்டார்… பாகிஸ்தான் வீரர் கருத்து!

25 வருடத்துக்கு முன்பு யாராவது இதை சொல்லியிருந்தால்..?- அஸ்வின் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments