சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அஸ்வின்..!

vinoth
புதன், 18 டிசம்பர் 2024 (11:27 IST)
தற்போது டெஸ்ட் விளையாடி வரும் பவுலர்களில் தனிச்சிறப்பு வாய்ந்தவர் அஸ்வின். 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 516 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பாக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளார் அஸ்வின்.

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடி வரும் அஸ்வின் திடீரென தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக அஸ்வினுக்கு வெளிநாட்டுத் தொடர்களில் தொடர்ந்து வாய்ப்புக் கிடைக்காமல் இருந்தது. தற்போது நடந்து வரும் தொடரில் கூட அவர் ஒரு போட்டியில்தான் விளையாடினார். இந்தியாவுக்கு அடுத்த டெஸ்ட் தொடர் 7 மாதங்களுக்குப் பிறகுதான் என்பதால் இப்போது அவர் ஓய்வை அறிவித்துள்ளார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல் வரலாற்றில் ரிட்டர்யடு ஹர்ட் ஆன முதல் வீராங்கனை.. ரன் எடுக்க திணறியதால் அதிரடி..!

ஐசிசி தரவரிசையில் ரோகித்தை தாண்டி முன்னேறிய விராட் கோலி!....

1,403 நாட்களுக்குப் பிறகு விராத் கோலிக்கு கிடைத்த பெருமை.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கடைசி போட்டி!.. ரசிகர்களை சோகமாக்கிய ஆஸ்திரேலிய கேப்டன்!...

ஹோபர்ட் ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம் அதிர்ச்சி தோல்வி!..

அடுத்த கட்டுரையில்
Show comments