Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமெரிக்காவில் மரணம்!

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:32 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்தது. இந்த போட்டியை காண பிசிசிஐ மற்றும் பல மாநில அணி நிர்வாகிகள் அமெரிக்காவுக்கு சென்றனர். அதில் மும்பை கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் அமோல் காலேவும் ஒருவர்.

போட்டியைப் பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர், மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பொறியியல் பட்டதாரியான அமோல், மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர். மும்பை வாரியம் நடத்தும் போட்டிகளில் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கியும், மும்பை வான்கடே மைதானத்தைப் புதுப்பித்தும் நற்பெயரைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

கடைசியில் இவர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளரா?

மகளிர் டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா..!

12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!

அடுத்த கட்டுரையில்
Show comments