Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலியல் புகார் விவகாரம்: தனுஷ்கா குணதிலகாவுக்கு நீதிமன்றம் ஜாமீன்

dhanusha-kunathilaga
, வியாழன், 17 நவம்பர் 2022 (15:02 IST)
பாலியல் புகாரில் சிக்கி ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சமீபத்தில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த அணியில் உள்ள ஆல்ரவுண்டர் வீரரான தனுஷ்கா குணதிலகா ஒரு பெண்ணோடு பழகி, அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பற்ற முறையில் அவரின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு கொண்டதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, கடந்த 6 ஆம் தேதி  அவர் ஆஸ்திரேலியா போலீஸாரால் கைது செய்யபப்ட்டார். அவர் மீதான வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறைதண்டனை விதித்தது. குணதிலக இதற்கு முன்பும் இதுபோல பாலியல் சம்மந்தமான புகார்களில் சிக்கியுள்ள நிலையில், தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியில் இருந்து தற்காலிகமாக நிக்கி அந்த நாட்டு கிரிக்கெட் போர்ட் உத்தரவிட்டது.


இந்த நிலையில், தனுஷ்க குணாதிலகாவுக்கு நீதிமன்றம்  ஜாமீன் வழங்கி உத்தரவிடுள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்த்திக் பாண்டியாவை புகழ்ந்த இந்திய அணியின் பயிற்சியாளர்