Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

vinoth
திங்கள், 8 ஜூலை 2024 (07:36 IST)
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறப்பாக செயல்ப்பட்டு 234 ரன்கள் சேர்த்தனர்.

ஓப்பனிங் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சுப்மன் கில் 2 ரன்களில் அவுட் ஆனாலும், அபிஷேக் சர்மா நின்று அதிரடி காட்டி வந்தார். அவர் 47 பந்துகளுக்கு 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை அடித்து விளாசி அவுட் ஆனார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கடைசி நேர அதிரடியில் ஈடுபட இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 234 ரன்கள் சேர்த்தது.

இதன் பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்த வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அப்போது பேசிய அவர் “ முதல் போட்டியில் எங்கள் போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. இன்றைய நாள் எனக்கானது என உணர்ந்தேன். அதற்கேற்றபடி செயல்பட்டேன்.என் மேல் நம்பிக்கை வைத்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை பந்து சரியான இடத்தில் பிட்ச் ஆனால் அதை சிக்ஸருக்கு அடிக்க முயற்சி செய்வேன். அது முதல் பந்தாக இருந்தால் கூட.” என தன்னம்பிக்கையோடு பேசியுள்ளார். இந்த இன்னிங்ஸில் அவர் சந்தித்த முதல் பந்தையே சிக்சருக்கு விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments