Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரளி விஜய்யின் பொறுப்பான சதம்: இந்தியா 259/4

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (09:01 IST)
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முரளி விஜய் அந்நிய மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார். இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் அடித்துள்ளது.
 
இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் டிரன்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தவான் 12, புஜாரா 38, கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிக பொறுமையாக ஆடிய ரகானே 81 பந்தில் 32 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் தனது 4 ஆவது சதத்தை அடித்து அசத்தினார். 
 
இங்கிலாந்துக்கு எதிராகவும் அந்நிய மண்ணிலும் இவர் அடிக்கும் முதல் சதம் இது. மற்ற 3 சதங்களும் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்துள்ளார்.

இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களுடன் இருந்தது. முரளி விஜய் 122,  தோனி 50 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆன்டர்சன் 2, பிராட், பிளங்கெட் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments