சித்திரை திங்கள் அனைவரும் வரவேற்கும் பொன்னான நாள ். சித்திரையில் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று தமிழர்களால் தொன்று தொட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சித்திரைத் திங்களில்தான் எல்லா பெரிய கோயில்களிலும் 12 நாட்களுக்கு சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இதேபோல் சங்கரண்கோயில் திருவிழாவும் மிகச் சிறப்பானது.
சித்ரா பவுர்ணம ி, எமதர்மராஜனின் கணக்கரான சித்திர குப்தரின் ப்ரீதிக்காக கொண்டாடப்படுகிறது. சித்திரகுப்தனை திருப்தி செய்ய விரதம் இருந்து வழிபடுவது நம்முடைய வழக்கம். விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் பசும் பால், மோர் உண்ணக் கூடாது. ஆனால், எருமைப் பால் சாப்பிடலாம் அதில் உப்பு சேர்க்கக் கூடாது.
பயத்தம் பருப்பும், எருமைப் பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்வது மிகச் சிறப்பாகும். பூஜையை முடித்துவிட்டு சித்திரகுப்தரை பயபக்தியுடன் தரிசிக்க வேண்டும்.
சித்திரை மாதம் வரும் அமாவாசையும், கிருத்திகையும் கூட பண்டிகைகளாகக் கொண்டாடப்படுகின்றன. இம்மாதத்தில் தான் புண்ணிய புருஷர் ஆதிசங்கரர் அவதரித்த திருநாள் வருகிறது. சந்தோஷம் பொங்கும் இந்த சித்திரை மாதத்தில் ராமானுஜர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
webdunia photo
WD
ஆதிசங்கரர் அவதரித்தது பஞ்சமி திதி. ராமானுஜர் அவதரித்தது திருவாதிரை நட்சத்திரத்தில். சில ஆண்டுகளில் இருவரது ஜெயந்தியும் ஒரே நாளில் வருவதும் உண்டு.
சித்திரை வருடப்பிறப்பு கேரள மக்களால் ‘விஷ ு’ என்றழைக்கப்படுகிறது. விஷுவுக்கு முதல் நாள் ஓலை வேய்ந்த வீடுகளில் பழைய ஓலைகளை நீக்கி புது ஓலை வேய்வார்கள். மற்ற வீடுகளில் வர்ணம் பூசுவர். வீடுகளை பல விதங்களிலும் அலங்கரிப்பார்கள்.
விஷுவுக்கு முதல் நாள் இரவில் ஒரு பெரிய தட்டில் அரிசியை பரப்பி அதில் நவதானியங்கள், பொன் நகைகள், புத்தகங்கள், உடைத்த தேங்காய்கள், கொன்றை மலர், வெள்ளரிக்காய், மாவடுக் கொத்து, தின்பண்டங்கள் ஆகியவற்றை அழகாய் அடுக்கி படுக்கையறையில் வைத்து விடுவர்.
webdunia photo
WD
விஷு நாளில் பொழுது விடியும் முன்பாக விழி திறவாமல், முதல் நாள் வைத்த தட்டை கண்டுவிட்டு பிறகு மற்ற பொருட்களை காண்பர். இதனை ‘விஷுக்கனி காணுதல ் ’ என்பார்கள். மலரும் புத்தாண்டில் விழிகளை திறந்ததும் சுபமான பொருட்களை காண்பதால் நம் ஆக்கபூர்வமான கனவுகள் நனவாகும் என்று நம்புகின்றனர். இவ்விதம் விஷுக்கனி காண்பதை 'மங்களத்திண்ட ப்ரதீ ஷ' என்றழைக்கின்றனர்.