Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் 2017; ரூ.2.5 - 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் : 50 சதவீதம் வரி குறைப்பு

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (13:10 IST)
ரூ.2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் வரி குறைப்பு. 


 


2017-ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதனையடுத்து இன்று நிதியமைச்சர் அருண்  ஜெட்லி மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முதல் முறையாக ரயில்வே பட்ஜெட்டுடன் இணைந்து இன்று தாக்கல் செய்யப்படுகிறது. ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டது வரலாற்று முக்கியவத்தும் வாய்ந்தது.
 
இதில், பொதுவாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், ரூ.2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு, 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரி தாக்கல் செய்யும் விண்ணப்பம் இனி ஒரே பக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments