டி.ராஜேந்தருக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி

Webdunia
ஞாயிறு, 15 ஜூலை 2018 (13:36 IST)
தனக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தருக்கு நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பாலியல் புகார்கள் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
 
இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும், மேலும் நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார்.
 
நேற்று செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர், சமுதாயத்தில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திரைப்படத்துறையில் நல்லவர்களும் உள்ளனர், சில  மோசமானவர்களும் உள்ளனர். பாலியல் புகார் கூறுவது ஸ்ரீ ரெட்டியின் உரிமை. அந்த புகார்கள் குறித்து புகாருக்கு ஆளானவர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்,  அவர்களிடம் வாய் இல்லையா? என ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டி, தனக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்