விக்ரம் பத்ராவின் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் - சித்தார்த் மல்ஹோத்ரா

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (19:09 IST)
விக்ரம் பத்ராவின் கேரக்டரில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
 
தமிழ்ப் படங்களை இயக்கிவந்த விஷ்ணுவர்தன், முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கிறார். 1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறார். மத்திய அரசு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’வை வழங்கி கெளரவித்தது.
 
விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’படையப்பா’ 2ஆம் பாகம் வரும்.. டைட்டில் இதுதான்.. ரஜினிகாந்த் கொடுத்த தகவல்..!

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments