Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமாயணத்தை ஆக்‌ஷனுடன் கலந்து கட்டிய ரோஹித் ஷெட்டி! - சிங்கம் அகெய்ன் ட்ரெய்லர்!

Prasanth Karthick
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (12:47 IST)

இந்தி இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் உள்ளிட்ட இந்தி ஸ்டார் நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் ‘சிங்கம் அகெய்ன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

 

 

இந்தியில் பிரபல ஆக்‌ஷன் பட இயக்குனராக இருப்பவர் ரோஹித் ஷெட்டி. தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தை இந்தியில் அஜய் தேவ்கனை வைத்து ரீமேக் செய்து வெற்றியும் பெற்றார் ரோஹித் ஷெட்டி. அதன் பின்னர் சிங்கம்-2 என்று இரண்டாம் பாகத்தை தனது சொந்த கதையாகவே எடுத்தார் ரோஹித் ஷெட்டி.

 

அதன்பின்னர் சிம்பா, சூர்யவன்ஷி உள்ளிட்ட படங்களை எடுத்து இந்தியில் Cop Universe என்று தனியாக ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை தயார் செய்தார். அந்த வரிசையில் தற்போது ‘சிங்கம் அகெய்ன்’ படம் வெளியாகிறது. ராமாயண கதையை நவீன காலத்துடன் தொடர்புபடுத்தி தயாராகியுள்ள இந்த படத்தில் அஜய் தேவ்கன், கரீனா கபூர், தீபிகா படுகோன், அக்‌ஷய் குமார், ரன்வீர் சிங் உள்ளிட்ட இந்தி முன்னணி நாயக, நாயகியர் நடித்துள்ளனர்.

 

முழுவதும் ஆக்‌ஷன் அதிரடியாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் மட்டுமே 5 நிமிடங்கள் நீள்கிறது. இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ!

அடுத்த கட்டுரையில்
Show comments