Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாலிவுட் ரீமேக் பேச்சுவார்த்தை –ராட்சசன் படக்குழுவினர் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (16:11 IST)
சமீபத்தில் ரிலீசாகி சிறப்பான வரவேற்பைப் பெற்ற ராட்சசன் படத்தின் ஹாலிவுட் ரீமேக் பற்றி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த் மற்றும் பலர் நடித்து கடந்த அக்டோபர் 5-ந் தேதி வெளியான ராட்சசன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சைக்கோ த்ரில்லராக காட்சிக்கு காட்சி விறுவிறுப்புடன் கூடிய அபாரமான திரைக்கதையும் ஜிப்ரானின் மிரட்டலான பின்னணை இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கயமான காரணங்களாக அமைந்தன.

தியேட்டர்கள் மூலம் நல்ல லாபத்தை ஈட்டியுள்ள இந்த படம் தற்போது ரீமேக் ரைட்ஸ் மூலமாகவும் நல்ல லாபம் சம்பாதித்து வருகிறது. இப்படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை இப்படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலே வாங்கியுள்ளார். அதையடுத்து இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரானின் நண்பர் ஒருவர் இந்த படத்தினை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய கேட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடையும் பட்சத்தில் தமிழில் இருந்து ஹாலிவுட்டிற்கு ரீமேக் ஆகும் முதல் படமாக ராட்சசன் அமையும்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments