Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 வருடங்களுக்குப் பிறகு ரமேஷ் சிப்பியின் படத்தில் நடிக்கும் ஹேமமாலினி

Webdunia
புதன், 25 ஜூன் 2014 (18:55 IST)
ரமேஷ் சிப்பியின் பெருமையைச் சொல்ல பல படங்கள் வேண்டாம். 1975 -ல் வெளியான ஷோலே மட்டும் போதும். இந்திய கமர்ஷியல் சினிமாவில் ஷோலே முக்கியமான படம். இந்திய சினிமாவை ஷோலேக்கு முன் ஷோலேக்கு பின் என்று பிரிக்கலாம் என்கிறார் இயக்குனர் சேகர் கபூர்.
 
ஷோலேயில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கானுக்கு இணையாக கலக்கியவர் ஹேமமாலினி. அவரது கதாபாத்திரம் ஷோலேக்கு புதுவிதமான வண்ணத்தை தந்தது.  39 வருடங்களுக்குப் பிறகு ரமேஷ் சிப்பியும் ஹேமமாலினியும் ஒன்று சேர்கிறார்கள்.
தர்மேந்திராவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் குடும்ப வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த பிறகும் ஹேமமாலினி இயக்குனர், நடிகை என்ற அளவில் சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பங்களிப்பு செலுத்தி வந்தார். மூத்த மகள் இஷா தியோலுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.
 
ரமேஷ் சிப்பி வரும் ஆகஸ்ட் மாதம் தனது புதிய படம் சிம்லா மிர்ச்சியை தொடங்குகிறார். அதில் பிரதான வேடத்தில் நடிப்பவர்கள் ஹேமமாலினியும், ராஜ்குமார் ராவும். இதுவொரு ரொமாண்டிக் மூவி.
 
39 வருடங்களுக்குப் பிறகு ரமேஷ் சிப்பியும், ஹேமமாலினியும் ஒன்றிணைகிறார்கள். ஷோலேயின் மேஜிக் இதில் மீண்டும் நிகழ்த்தப்படுமா?
 
ஹேமமாலினி தமிழ்நாட்டிலுள்ள ஒரத்தநாடை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

”டிக்கியை காட்டுங்க மேடம்..!” ”முடியாது சார்.. வீடியோ எடுக்காதீங்க!” – போலீஸாருடன் நிவேதா பேத்துராஜ் வாக்குவாதம்?

’புஷ்பா 2’ படத்தின் “சூசேகி” பாடல் வெளியானது!

’மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

கருப்பு ட்ரஸ்ஸில் ஸ்டைலான போஸ் கொடுத்த ராஷிகண்ணா… லேட்டஸ்ட் ஆல்பம்!

சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூரின் அட்டகாச போட்டோ ஆல்பம்!

Show comments