Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசத்தில் மட்டும் மீண்டும் யாத்திரை.. ராகுல், பிரியங்கா காந்தி பங்கேற்பு..!

Siva
ஞாயிறு, 9 ஜூன் 2024 (08:45 IST)
தேர்தலுக்கு முன்னர் தேசிய அளவில் ராகுல் காந்தி யாத்திரை நடத்திய நிலையில் தற்போது தேர்தலுக்குப் பின்னர் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
உத்திரபிரதேசம் மாநிலம் என்பது பாஜகவின் கோட்டை என்று கூறப்பட்ட நிலையில் அங்கு இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணியை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் யாத்திரை நடத்தப்பட உள்ளதாகவும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொள்வார்கள் என்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
 
ராகுல் காந்தியின் தேசிய நடைப்பயணம் மக்கள் இடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி அரசியல் சாசனத்திற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை உத்தரபிரதேச மக்கள் காப்பாற்றி உள்ளனர் என்றும் வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசத்தில் நன்றி யாத்திரை நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் உத்தர பிரதேச மாநில பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சியில் இல்லாதது ‘குட் பேட் அக்லி’யில் 10 மடங்கு இருக்கும் – ஸ்டண்ட் இயக்குனர் உறுதி!

எனக்குக் காப்பிரைட் பணமெல்லாம் வேணாம்.. இதுவே போதும்- இசையமைப்பாளர் தேவா!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்குகிறாரா கார்த்திக் சுப்பராஜ்?

வெளியானது கவின் நடிக்கும் ‘கிஸ்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்… காதலர் தினத்தில் டீசர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடுவாரா பும்ரா?... பிசிசிஐ இன்று முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments