Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

Prasanth Karthick
திங்கள், 17 ஜூன் 2024 (09:30 IST)

சமீபத்தில் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் தற்போது யூட்யூபர் ஒருவர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சல்மான்கான். தனது பிரபலத்திற்கு ஏற்றவாறு பல சர்ச்சைகளை சந்தித்து வருபவர். முன்னதாக மானை சுட்டுக் கொன்ற வழக்கில் சிறை சென்ற சல்மான்கான் மீது, குடித்து விட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ரசிகர்களை தாக்கியது என பல சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் உள்ளது.

சமீபத்தில் இவர் வீட்டு மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணையில் ஹரியானாவை சேர்ந்த பிஷ்னோய் மற்றும் கோல்டி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பன்வாரிலால் பண்டி என்ற யூட்யூபர் வெளியிட்ட வீடியோ மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் லாரன்ஸ் பிஷ்னாய் மற்றும் கோல்டி கேங்கை சேர்ந்தவர்கள் தன்னுடன் உள்ளதாகவும், தான் சல்மான்கானை கொல்ல போவதாகவும் பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பன்வாரிலாலை கைது செய்த போலீஸார் உண்மையாகவே கோல்டி கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? பிரபலமாவதற்காக இதுபோல செய்தாரா? என விசாரித்து வருகின்றனர்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹன்சிகாவின் லேட்ட்ஸ்ட் ஹாட் புகைப்பட ஆல்பம்!

விண்டேஜ் லுக்கில் ஜொலிக்கும் அனுபமா பரமேஸ்வரன்!... கார்ஜியஸ் ஆல்பம்!

சஞ்சய் & சந்தீப் இணையும் படத்தின் ஷூட்டிங் எப்போது?.. வெளியான தகவல்!

பொறுத்தது போதும் என இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம்!

இன்று வெளியாகிறது மம்மூட்டி & கௌதம் மேனன் இயக்கும் படத்தின் டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments