ரஜினி பட தலைப்பை வைக்கிறதா சூர்யா 42 படக்குழு! லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (09:15 IST)
நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைமை செயல் அதிகாரி தனஞ்செயன் “இந்த படம் மொத்தமாக 180 நாட்கள் ஷூட்டிங் என்று சிறுத்தை சிவா சார் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அதற்கான காரணம் இந்த கதையில் உள்ளது. பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே 60 முதல் 80 நாட்கள் வரை செல்லும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு, ப்ரமோஷன் வீடியோ ஒன்றும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு கங்குவா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைப்பில் ரஜினிகாந்த் நடித்த இந்திய படம் ஒன்று 80 களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகன் ஆடியோ விழாவில் கலந்து கொள்ள போகும் பிரபல நடிகர்! அப்போ கன்ஃபார்ம்தான்

பேரரசு’ டைம்ல கோபப்பட்டு கிளம்பிய விஜயகாந்த்.. கோபத்திற்கான காரணம்தான் ஹைலைட்

மலேசியாவில் அஜித்துடன் மீட்டிங்!. நான் தல ஃபேன்!.. சிம்பு அப்பவே சொன்னாரு!..

சிரஞ்சீவி - நயன்தாரா ஆட்டம் போடும் டூயட் பாடல்.. 'மன சங்கரவரபிரசாத் காரு' சிங்கிள் பாடல் ரிலீஸ்..

பிக் பாஸ் 9: இந்த வாரத்தில் அதிர்ச்சி வெளியேற்றம்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கலையே...!

அடுத்த கட்டுரையில்
Show comments