Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிர்த்திக் ரோஷன், சூசன்னே விவாகரத்து, நிரந்தரமாகப் பிரிந்தனர்

Webdunia
ஞாயிறு, 2 நவம்பர் 2014 (08:29 IST)
ஹிர்த்திக் ரோஷனும், அவரது மனைவி சூசன்னேயும் கடந்த ஏப்ரல் மாதம் விவாகரத்துக் கோரி விண்ணப்பித்திருந்தனர். பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்துக்கு விண்ணப்பித்த அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
 
ஹிர்த்திக் ரோஷன் சூசன்னேயை இளம் பருவத்திலேயே காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் 2000 -இல் நடந்தது. 13 வருட தாம்பத்தியத்தில் அவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். 
 
கடந்த சில வருடங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதற்கு மேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று பரஸ்பரம் முடிவு செய்து விவாகரத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் விண்ணப்பித்தனர்.
 
தற்போது நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து அளித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இருவரின் 13 ஆண்டுகால இல்லறம் முடிவுக்கு வந்தது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments