Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர்கானுடன் 3ம் திருமணம்: மௌனம் களைத்த நடிகை ஃபாத்திமா!

Webdunia
வெள்ளி, 9 ஜூலை 2021 (18:01 IST)
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அமீர் கான் இந்திய சினிமாவிலே முக்கிய நடிகராக தென்படுகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து விசித்திரமான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் அமீர்கானுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
 
தற்போது 53 வயதாகும் அமீர்கானுக்கு 1986 ஆம் ஆண்டு ரனா தத்தா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்களுக்கு ஜுனைத் என்ற மகனும், ஐரா என்ற மகளும் பிறந்தனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு மனைவி ரனா தத்தாவுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணத்தால் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
 
அதையடுத்து 2005ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். கிரண் ராவ் அமீர்கான் நடித்த லகான் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள் இருவருக்கும் அசாத் ராவ் கான் என்ற மகன் பிறந்தார். இதையடுத்து அண்மையில் அமீர் கான் மனைவி கிரண் ராவ்வை திடீர் விவாகரத்து செய்து அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
 
பின்னர் அமீர்கான் தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த சனா ஷேக்கை 3ம் திருமணம் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வதந்தி குறித்து ஒரு வழியாக மௌனம் கிளைத்த இளம் நடிகை பாத்திமா சனா சாய்க், " முன்பெல்லாம் இதுபோன்ற செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது. இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாமல் அப்டியே விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும் என கூலாக பதிலளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தனுஷின் ராயன் படத்தின் ஆடியோ & டிரைலர் ரிலீஸ் தேதி இதுதான்!

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments