Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோன் இடத்தில் தபு - ஒரு த்ரில்லர் ஜர்னி

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2017 (13:11 IST)
பத்லாப்பூர் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தில் தபு நடிக்கிறார். இதுவொரு த்ரில்லர் படமாக உருவாகிறது.

 
த்ரில்லர் படங்கள் குறித்து பேசுகையில் சட்டென்று நினைவுவரும் பெயர் ஸ்ரீராம் ராகவன். இவரது ஏக் ஹசினா தே, ஜானி கத்தார் படங்கள் ரசிகர்களை த்ரில் உலகில் உலவ வைத்தவை. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த சிறப்பான த்ரில்லர் படம், பத்லாப்பூர்.
 
விரைவில் தனது புதிய படத்தை ஸ்ரீராம் ராகவன் தொடங்குகிறார். இதில் தீபிகா படுகோன் நடிப்பதாக பேசப்பட்டது. இப்போது  தபுவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
 
தபு ஸ்கிரிப்ட் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருப்பதால் வருடத்துக்கு ஒன்றோ இரண்டோ படங்களில்  மட்டுமே நடிக்கிறார். சென்ற வருடம் ஒரேயொரு படத்தில் நடித்தவர் ஸ்ரீராம் ராகவனின் படத்தை ஒப்புக் கொண்டதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். அது,
 
படத்தின் ஸ்கிரிப்ட்.

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’- பூஜையுடன் தொடக்கம்!

சல்மான் கான் படத்துக்காக சிவகார்த்திகேயன் படத்துக்கு பிரேக் விடும் முருகதாஸ்!

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments