Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புற்றுநோயாளியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப்பச்சன்

புற்றுநோயாளியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப்பச்சன்

Webdunia
சனி, 21 மே 2016 (15:23 IST)
புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியின் ஆசையை பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நிறைவேற்றியுள்ளார்.


 

 
மும்பையில் வசிக்கும் ஹர்டிகா என்ற சிறுமி புற்றுநோய் மற்றும் சுவாசக் கோளாறு ஆகியவைகளால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் சிலிண்டர் உதவியிடன் வாழ்ந்து வருகிறார். அந்த சிறுமிக்கு நடிகர் அமிதாப்பச்சனை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்று ஆசை இருந்தது.
 
இந்த தகவல் அமிதாப்பச்சனிடம் கூறப்பட்டது. இதனையடுத்து ஹர்டிகாவின் பிறந்த நாளன்று அவரை வீட்டிற்கு வரவழைத்த அமிதாப், அந்த சிறுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அங்கேயே கேக்கை வெட்ட செய்து, அவரின் பிறந்த நாளை கொண்டாடினார்.
 
அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததோடு, அந்த பெண்ணின் மன உறுதியை பாராட்டியுள்ளார். மேலும், ஹர்டிகா பூரண குணமடைய தான் பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments