Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹவுஸ்ஃபுல் 3 - கன்பார்ம் செய்த ஈரோஸ்

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (15:14 IST)
அக்ஷய் குமாருக்கு கரியர் லிப்டாக அமைந்த பல படங்களுள் ஹவுஸ்ஃபுல் சீரிஸ் முக்கியமானது. இதுவரை இரண்டு பாகங்கள் வெளியாகியிருக்கின்றன. இரண்டுமே சூப்பர்ஹிட்.
 
விரைவில் ஹவுஸ்ஃபுல் 3 -வது பாகத்தை தொடங்கவிருப்பதை ஈரோஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
 
ஹவுஸ்ஃபுல் சீரிஸின் முதல் பாகம் கமல், பிரபுதேவா நடித்த காதலா காதலா படத்தின் மேலோட்டமான தழுவல். தமிழில் தோல்வியடைந்த காதலா காதலா இந்தியின் பளபளப்பில் மிகப்பெரிய வெற்றிப் படமானது.
 
அதன் இரண்டாவது பாகம் மலையாளத்தில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் வெளியான மாட்டுப்பட்டி மச்சான் படத்தின் தழுவல். மலையாளத்தில் சில லட்சங்களில் தயாரிக்கப்பட்ட படம் இந்தியில் ஹவுஸ்ஃபுல் 2 -வாக ரீமேக் செய்யப்பட்டு 100 கோடிக்கு மேல் வசூலித்தது. 3 -வது பாகமும் இதுபோல் ஏதாவது ரீமேக்காகதான் இருக்கப் போகிறது. 
 
அக்ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக்குடன் அபிஷேக் பச்சனும் 3 -வது பாகத்தில் நடிக்க உள்ளார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments