Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம்... தயாராகுங்க, இதுதான் சரியான நேரம்

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (12:10 IST)
ஹாலிவுட் படங்களில் அதிகம் நடித்த இந்திய நடிகர் பட்டியலில் இர்பான் கான் முதலாவதாக வருவார். இந்தியர் என்றால் ஹாலிவுட்டுக்கு இவர்தான் மனக்கண்ணில் வருவார். ஸ்லம் டாக் மில்லியனர், ஏ மைட்டி ஹார்ட், லைஃப் ஆஃப் பை, த அமேஸிங் ஸ்பைடர்மேன் படங்களில் எல்லாம் திறமை காட்டியிருக்கிறார். 
 
இவரது த லஞ்ச் பாக்ஸ் படம் இந்தியாவில் ஓடியதைவிட அதிக வரவேற்புடன் ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளில் ஓடியது. சர்வதேச அளவில் சில விருதுகளையும் வென்றது. அதன் டிவிடியை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய இர்பான்,
 
நாம் இதுவரை ஹாலிவுட்டைதான் கவனித்து வருகிறேnம். அவர்கள் நம்மை கவனிக்கிற மாதிரி படங்கள் எடுக்க வேண்டிய சரியான நேரம் இது. நம்மிடம் உலக சினிமாவை பாதிக்கிற கதைகளும், திறமைசாலிகளும் நிறைய இருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
 
ஸ்பீல்பெர்க்கின் ஜுராஸிக் பார்க் சீரிஸின்  நான்காவது பாகமான ஜுராஸிக் வேர்ல்ட் படத்திலும் இர்பான் நடித்துள்ளார். படம் இன்னும் வெளியாகவில்லை என்பது முக்கியமானது.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments