Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிருகங்களின் நலனுக்காக கால்பந்து விளையாடிய அமீர்கான் - படங்கள்

Webdunia
வியாழன், 24 ஜூலை 2014 (13:03 IST)
மிருகங்களின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பு PIGI ஃபவுண்டேஷன். விலங்கு காப்பகம் ஒன்றை அமைப்பதற்கு பணம் திரட்டும் முயற்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த அமைப்பு கால்பந்து போட்டி ஒன்றை நடத்தியது.
இதில் கலந்து கொண்டவர்கள் பாலிவுட்டின் பிரபல நடிகர்கள். பிரபல என்றால் உச்ச நடிகர்கள். ஒரு கால்பந்து அணிக்கு கேப்டன் பொறுப்பு எடுத்துக் கொண்டவர் அமீர் கான். எதிரணியின் கேப்டன் அபிஷேக்பச்சன். அணியில் இடம்பெற்றவர்கள் சோகையில் கான், கரண் வகி போன்ற பிரபலங்கள்.
இந்த கால்பந்து போட்டியை ஒழுங்கு செய்தவர் அமீர்கானின் மகள் இரா (அமீர்கான் எப்படி இதில் கலந்து கொண்டார் என்ற சந்தேகத்துக்கு பதில் கிடைத்ததா?) இராவின் ஆன்டியும் நடிகர் இம்ரான் கானின் அம்மாவுமான நுஸாத் கான் இந்த அமைப்பின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். 
 

கால்பந்து போட்டியில் அமீர்கானின் அணி 4 - 2 என அபிஷேக்பச்சான் தலைமையிலான அணியை தோற்கடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு சல்மான்கான் பரிசு வழங்கினார்.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments