Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனாக்ஷி சின்காவுக்கு பதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ்

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (18:16 IST)
சோனாக்ஷி சின்கா நடிக்கயிருந்த வீடியோ ஆல்பத்தில் அவருக்குப் பதில் இடம் பிடித்துள்ளார் கிக் பட நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ்.
 
பிரபல ராப்பர் ஹனி சிங் தனது அடுத்த மியூஸிக் வீடியோ ஆல்பத்தில் சோனாக்ஷி சின்காவை நடிக்க வைப்பதாக இருந்தார். ஆனால் தனது முடிவை திடீரென்று மாற்றி ஜாக்குலின் பெர்னாண்ட்ஸை நடிக்க வைப்பது என்று முடிவு எடுத்துள்ளார். இதற்கு காரணம் கிக்.
பிரபல மாடலாக இருந்தாலும் ஜாக்குலின் பாலிவுட்டில் பெரிய நடிகை கிடையாது. கிக் படத்தில் சல்மான் ஜோ‌டியாக அறிவிக்கப்பட்ட பிறகே அவரது பெயர் பரவலாக உச்சரிக்கப்பட்டது. படம் வெற்றி பெற்றதும் விளம்பர வெளிச்சம் பாய்ந்தது. ஜாக்குலினின் அழகு திறமை இரண்டும் இந்தப் படத்துக்குப் பிறகே உலகின் கண்களுக்கு தெரிய வந்தது.
 
கிக் படத்தில் ஜாக்குலினின் திறமையை பார்த்த பிறகே இந்த முடிவை எடுத்தேன் என்று ஹனி சிங்கும் கூறியுள்ளார்.

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?

Show comments