Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமிதியாஸ் அலியின் படத்தில் ரன்பீர், தீபிகா படுகோன்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (17:46 IST)
ஹைவே திரைப்படம் வெற்றியா, தோல்வியா? அசட்டுத்தனமான திரைக்கதை, இது எல்லாம் என்ன படம் என்று விமர்சிப்பவர்களே அதிகம். ராக்ஸ்டார் படத்தை தந்தவர் இப்படியொரு மோசமான படத்தை ஏன் எடுக்க வேண்டும்?
ஒருபுறம் இப்படி கடுமையாக விமர்சிக்கப்படுகிற அதேநேரம் அலியா பட்டின் துறுதுறு நடிப்பை சிலர் கொண்டாடுகிறார்கள். 
 
எப்படியிருப்பினும் இமிதியாஸ் அலிக்கு ஹைவே சின்ன பின்னடைவுதான். அதிலிருந்து மீள உடனடியாக அடுத்தப் படத்தை இயக்குகிறார்.
 
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடிக்கின்றனர். ஜுலையில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. 
 
ராம் லீலா படத்தைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் சரித்திரப் படத்திலும் தீபிகா படுகோன் நடிப்பதாக தகவல். இதுபற்றி கேட்டதற்கு, இமிதியாஸ் படத்தில் மட்டுமே இப்போது நடிக்கிறேன். பிற படங்கள் குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். அதேபோல் ராம் லீலாவில் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக நடித்தது பற்றியும் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.
 
இருவருக்குமே நல்ல கதாபாத்திரம். அதனால் எங்களின் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்டானது. அடுத்து நாங்கள் சேர்ந்து நடிக்கையில் இதேபோல் கெமிஸ்ட்ரி இருக்க வேண்டும். ஏன், இதைவிட அதிகமாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகணும் என்பதுதான் என்னுடைய விருப்பம் என்று கூறியுள்ளார்.
 
ஆனால் இது திரையில் மட்டும்தான். ரன்வீரை காதலிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ய் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

“2002 ஆம் ஆண்டு பாலிவுட் இருந்த மோசமான நிலையில் இப்போது தமிழ் சினிமா இருக்கிறது”- விட்னஸ் திரைப்பட இயக்குனரின் ஆதங்கம்!

பிரபல டப்பிங் கலைஞர் தேவன்குமார் காலமானார்..! திரையுலகினர் அஞ்சலி..!!

இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Show comments