Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவருடன் சேர்ந்து நடிப்பதை மக்கள் விரும்புகிறார்கள்

Webdunia
வியாழன், 17 ஏப்ரல் 2014 (17:53 IST)
அக்சய் குமாருடன் இணைந்து நடிப்பதை மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார் சோனாக்‌சி சின்கா.
 
சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் நான்குப் படங்களில் அக்சய் குமாரின் ஜோடி சோனாக்‌சி சின்கா. நான்காவது படம், நம்மூர் முருகதாஸின் ஹாலிடே. துப்பாக்கி படத்தின் இந்தித் தழுவல். 
சும்மாச் சும்மா அவர்கூடவே ஜோடி போடறீங்களே என்று கேட்டதற்கு சோனாக்ஷி சில விளக்கங்கள் தந்துள்ளார். அதில் ஒன்றுதான், மக்கள் விருப்பறாங்க.
 
ஒரு ஜோடி மக்களுக்குப் பிடித்தது என்றால் மீண்டும் மீண்டும் அந்த ஜோடியை திரையில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதிக படங்களில் இணைந்து நடித்ததற்கு இதுதான் முக்கிய காரணம்.
 
சோனாக்‌சி சொல்லும் இன்னொரு காரணம், அவரும், அக்சயும் நேரம் தவறாதவர்கள். தொழிலில் ரொம்ப சின்சியர். அதனால் எங்களை வைத்து படம் தயாரிப்பவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். இதுவும் காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
 
ஹாலிடே தவிர்த்து இரு படங்களில் சோனாக்‌சி நடித்து வருகிறார். அதில் ஒன்று பிரபுதேவா இயக்கும் ஆக்சன் ஜாக்சன். பிரபுதேவா இயக்கிய முதல் படம் வான்டடில் மட்டும் வேறு ஹீரோயின். அடுத்து இயக்கிய ரவுடி ரத்தோர், ரா...ராஜ்குமார் இரண்டிலும் சோனாக்‌சிதான் நாயகி. நான்காவது படம் ஆக்சன் ஜாக்சனிலும் நாயகி சோனாக்‌சிதான்.
 
இதுக்கு ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறாரா?
 

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

Show comments