Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யேமனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2015 (20:41 IST)
யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்துவரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
 

 
இந்திய கடல் மற்றும் வான் படைகளின் விமானங்களும் கப்பல்களும், மேலதிகமாக ஏர் இந்தியா விமானங்களும் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
 
முதற்கட்டமாக யேமனின் கடற்கரை நகரான ஏதனிலிருந்து 400 இந்தியர்களை கப்பல் வழியாக ஜிபோட்டி நாட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம், யேமனின் ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
 
இந்த மீட்புப் பணியை மேற்பார்வையிட வெளியுறவுத்துறையின் இணையமைச்சர் ஜெனரல் வி.கே.சிங் நாளை காலை ஜிபோட்டி பயணமாவதாகவும் சையத் அக்பருதீன் கூறினார்.
 
கேரளா மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ள இரண்டு கப்பல்களில் மொத்தம் 1100 பேரை மீட்க முடியும் என்றும் இந்தக் கப்பல்கள் ஐந்து நாட்களில் குறிப்பிட்ட பகுதியை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
யேமனின் பிராந்திய தலைவர்களுடன் தொடர்ந்து இந்தியா தொடர்பில் உள்ளதால் விரைவில் அனைவரையும் மீட்க முடியும் என்றும் சையத் அக்பருதீன் கூறினார்.
 
ஏற்கனவே 80 இந்தியர்கள் ஜிபோட்டி வழியாக நாட்டிற்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments