Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 35 பேர், ஒருவர் மரணம்

Webdunia
திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (12:24 IST)
சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட 35 பேர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

 
பெண்கள், சிறார்கள் அடங்கலாக 35 பேர், குறித்த சரக்கு கொள்கலனில் மறைந்திருந்து லண்டனுக்கு வந்துள்ளனர்.
 
எசெக்ஸில் உள்ள டில்பரி இறங்குதுறையில் வைத்தே அதிகாரிகள் இந்தக் கொள்கலனைக் கைப்பற்றியிருந்தனர்.
 
நெதர்லாந்திலிருந்து வந்த கப்பலொன்று பொருள்களை இறக்கிக் கொண்டிருந்தபோது இந்தக் கொள்கலன் அகப்பட்டுள்ளது.
 
குறித்த இடத்திற்குக் காவல் துறையினரும் ஆம்புலன்ஸ் வண்டிப் பணியாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments