Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பியோடுபவர் சுடப்பட்டதைக் காட்டும் புதிய வீடியோ: போலீஸ்காரர் கைது

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2015 (20:50 IST)
அமெரிக்காவின் தெற்கு கரோலைனா மாகாணத்தில் வெள்ளையின போலீஸ்காரர் ஒருவர், ஆயுதமின்றி விலகியோடும் கருப்பின ஆண் ஒருவரை சுட்டுக் கொல்வதாகக் காட்டும் வீடியோ வெளியானதை அடுத்து அந்த போலீஸ்காரர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
 

 
சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்றவர் ஒருவர் எடுத்த கைத்தொலைபேசி வீடியோவைப் பார்த்த பின்னர் வடக்கு சார்ல்ஸ்டன் சட்ட நடவடிக்கை அதிகாரிகள் மைக்கேல் ஸ்லாகர் என்ற அந்த போலீஸ்காரரை கைது செய்துள்ளனர்.
 
அந்த போலீஸ்காரருடன் தகராறு ஏற்பட்டதை அடுத்து வால்டர் ஸ்காட் என்ற அந்த கருப்பின ஆண் தப்பியோடுவதை அந்த வீடியோ காட்டுகிறது.
 
வெள்ளையின அதிகாரிகளால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு நிறுவனமாக எஃப்பிஐ -யும் நீதித்துறையும் சேர்ந்து விசாரிக்கின்றன.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments