Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விண்ணில் செயற்கை கோள்களைத் தாக்க ரஷ்யா ஆயுத சோதனை' - அமெரிக்கா, பிரிட்டன்

Webdunia
விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றை ரஷ்யா பரிசோதனை  செய்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ரஷ்ய ஆயுதம் செயற்கைக்கோள்களைத் தாக்கும் அமைப்பை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை இதனை விவரித்துள்ளது.
 
ஆனால் ரஷ்ய விண்வெளி உபகரணங்களை சோதிக்க புதிய தொழில்நுட்பம் ஒன்றை பயன்படுத்தி வருவதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை விளக்கம்  அளித்திருந்தது.
 
ரஷ்ய செயற்கைக்கோளின் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே அமெரிக்கா கவலை எழுப்பியிருந்தது.
 
விண்ணில் இயங்கும் இத்தகைய கருவிகளை சோதிக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைகள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் விண்வெளிப் பொருட்களுக்கு அபாயத்தை உண்டாக்கும் ரஷ்யாவின் ராணுவக் கொள்கையுடன் ஒத்திருப்பதாக அமெரிக்க விண்வெளிப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஜெனரல் ஜே ரேமண்ட்  தெரிவித்துளார்.
 
ஆனால், தற்போது முதல்முறையாக இதே போன்ற குற்றச்சாட்டை பிரிட்டனும் முன்வைத்துள்ளது.
 
இது விண்வெளி சோதனை என்று ரஷ்யா கூறிவரும் நிலையில், இந்த ஏவுகணையானது ஆயுதங்கள் போல இருப்பதாக, அதாவது ஓர் ஆயுதத்திற்கான பண்புகளைக்  கொண்டிருப்பதாக பிரிட்டன் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments