Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக எடையினால் வரும் உயிர் ஆபத்து: பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (16:58 IST)
அதிக உடல் எடையுடன் இருப்பது, எதிர்பாராத விதமாக அகால மரணம் ஏற்படுவதற்கு நேரடியாக தொடர்புடையது என்று கண்டறிந்துள்ள ஒரு ஆய்வு, இந்த ஆபத்து பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
 

 
நான்கு கண்டங்களில் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் மக்களிடம் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வு, பருமனான மக்கள், சாதாரண எடையில் இருப்பவர்களை விட சராசரியாக மூன்று வருடங்கள் முன்னதாகவே உயிரிழப்பதாக கூறியுள்ளது.
 
மேலும், மிகவும் பருமனான மக்கள் தங்களின் ஆயுள் காலத்தில் பத்து வருடங்களை இழப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
 
அதிக எடையுடன் இருப்பது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான வியாதிகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் ஆபத்தினை அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
உயிர் வாழ்வதற்கான சாத்தியத்தை அதிக எடையுடன் இருப்பது சாதகமாக உருவாக்குகிறது என்ற முந்தைய கண்டுபிடிப்புகளின் பரிந்துரையிலிருந்து இந்த புதிய ஆய்வு முரண்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

400 கோடிக்கு மேல் பந்தயம்.. தடையை மீறி களைகட்டும் சேவல் சண்டை..!

தமிழக பாஜக தலைவர் மாற்றப்படுகிறாரா? அடுத்த வாரம் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நேற்று இறங்கிய தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை விலை நிலவரம்..!

பொங்கலுக்கு பின் படிப்படியாக மீண்டு வரும் பங்குச்சந்தை.. இன்றைய நிலை என்ன?

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் தேர்வு: மறுதேதி அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments