Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செக்ஸ் குற்றவாளிகள் போக்கிமான் - கோ விளையாட வருகிறது தடை

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2016 (05:57 IST)
பாலியல் குற்றவாளிகள் பரோலில் இருக்கும்போது போக்கிமான் - கோ விளையாட்டை விளையாடுவதை அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் தடை செய்யவுள்ளது.
 

 
மிகவும் பிரபலமான இந்த இணையதள விளையாட்டை விளையாடுகின்ற ஆயிரக்கணக்கான குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக மாகாண ஆளுநர் ஆன்ரூ குவோமோ தெரிவித்திருக்கிறார்.
 
இந்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், உண்மையான உலகில் சுற்றி திரிவதன் மூலம், தங்களுடைய செல்பேசிகளில் மெய்நிகர் கதாபாத்திரங்களை தேடுகின்றனர்.
 
இந்த தடை அறிவிக்கப்பட்டால், நியூயார்க்கில் தற்போது பரோலில் இருக்கின்ற ஏறக்குறைய மூவாயிரம் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகள் இதனை பதிவிறக்கம் செய்வது அல்லது பெரிய அளவில் விளையாடப்படும் இந்த மெய்நிகர் விளையாட்டுக்களை விளையாடுவதை இந்த நடவடிக்கை தடுக்கும்.
 
இந்த செல்பேசி விளையாட்டு செயலியை இத்தகைய குற்றவாளிகள் பயன்படுத்துவதிலிருந்து தடைசெய்யும் தொழில்நுட்ப ஆதரவை இந்த மென்பொருளை வடிமைத்துள்ள நியான்டிக் நிறுவனத்திடம் ஆளுநர் குவோமோ எழுதி கேட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்