Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சத்தில் உலகம்: ஏவுகணைகளை சோதித்த அசராத கிம்!

Webdunia
திங்கள், 2 மார்ச் 2020 (14:12 IST)
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா.
 
வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம். வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது. 
 
ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை.
 
தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருக்கிறது.
 
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே, வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந்து வலிமைப்படுத்த விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது, என்கிறார்.
 
மேலும் அவர், தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களது ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைத்தது கிம் அரசாங்கத்திடம் எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா உத்தவ் தாக்கரேயின் சிவசேனா?

இன்று இரவில் கனமழை பெய்யும்: 22 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

இன்று கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்..!

3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

20 வருடங்களாக மூக்கில் இருந்த டைஸ்.. 3 வயது சிறுவனாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments