Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூயார்க் டைம்ஸ் இதழை அச்சிட தாய்லாந்து அச்சகம் மறுப்பு

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (20:57 IST)
தாய்லாந்து நாட்டு மன்னர் குறித்த செய்தி இடம்பெற்றதால், தங்களது ஆசியப் பதிப்பை அச்சிட தாய்லாந்தில் உள்ள அச்சகம் மறுத்துவிட்டதாக தி நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 

 
முகப்புப் பக்கத்திலேயே இடம்பெற்றிருந்த அந்தக் கட்டுரை மிகவும் "சிக்கலுக்குரியதாக" இருந்ததாக அந்த அச்சகம் கருதியதாக நியுயார்க் டைம்ஸ் கூறியுள்ளது. இருந்தபோதும் இந்த நாளிதழின் இணையப் பதிப்பை தாய்லாந்தில் படிக்க முடியும்.
 
தாய்லாந்தின் அரசரான பூமிபோல் அதுல்யதேஜ் பாங்காக் மருத்துமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். அவருக்கு வயது 87. அவர் இறந்துவிட்டால், முடியாட்சியின் நிலை என்ன ஆகும் என்பது குறித்து அந்தக் கட்டுரையில் விவாதிக்கப்பட்டிருந்தது.
 

 
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் 2010ஆம் வருட புகைப்படம். சமீப வருடங்களில் மிக அரிதாகவே அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார்.
 
முடியாட்சியை யாராவது விமர்சித்தால் அவர்களை சிறையில் அடைக்கக்கூடிய வகையில் கடுமையான சட்டங்கள் தாய்லாந்தில் இருக்கின்றன.
 
செவ்வாய்க் கிழமைப் பதிப்பை அச்சிட முடியாதது குறித்து தாய்லாந்தில் இருக்கும் தி இன்டர்நேஷனல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது அச்சகத்தாரின் முடிவு என்றும் இதில் தங்களுக்குத் தொடர்பில்லையென்றும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments