Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிகார் மாநிலத்தில் மூன்று முஸ்லிம்கள் உயிருடன் எரிப்பு

Webdunia
செவ்வாய், 20 ஜனவரி 2015 (14:42 IST)
இந்தியாவின் வட மாநிலமான பிகாரில் மூன்று முஸ்லிம்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குறைந்தது 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கிராமம் ஒன்றில் காணாமல்போன இந்து ஒருவரின் உடல் ஒருவாரத்துக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்ட நிலையில், பலரது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. இதிலேயே முஸ்லிம்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
 
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அந்த இந்து இளைஞருக்கு 19 வயது என்றும் அவர் முஸ்லிம் பெண் ஒருவரை காதலித்தார் என்றும் பிபிசி ஹிந்தி சேவையிடம் கூறியுள்ள மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த இளைஞர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இந்திய சனத்தொகையில் 80 சதவீதமானவர்கள் இந்துக்கள். 13 வீதமானவர்கள் முஸ்லிம்கள் ஆவர்.
 
இரண்டு சமூகத்தினரும் பெரும்பாலும் அமைதியாகவே வாழ்ந்து வந்தாலும், அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே வன்முறையுடன் கூடிய மோதல்கள் ஏற்படுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இனக்குழுக்களுக்கு இடையே மோதல்களில் 50 பேர் உயிரிழந்திருந்தனர்.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments