Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வரும் இங்கிலாந்து அணி: டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி அட்டவணை!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (15:49 IST)
ஐபிஎல் 2020 நடந்து முடிந்த சூட்டோடு சூடாக, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
 
ஒரு நாள் போட்டி தொடரில் தொடங்கி டெஸ்ட் போட்டிகளில் முடிந்தது ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டிகள். ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி தொடரிலும், இந்தியா டி20 மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களிலும் வெற்றியைப் பதிவு செய்தன.
 
ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வீரர்களைக் கொண்ட அணியை, இந்தியாவின் இளம்படை அற்புதமாக எதிர்கொண்டது என கிரிக்கெட் உலகமே பாராட்டியது. மீண்டும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது.
 
பிப்ரவரி 05-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையில் நான்கு டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
 
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகள்:
முதல் டெஸ்ட் - சென்னையில் பிப்ரவரி 05-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 09-ம் தேதி நிறைவடைகிறது.
 
இரண்டாவது டெஸ்ட் - சென்னையில் பிப்ரவரி 13-ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. பிப்ரவரி 17-ம் தேதி நிறைவடைகிறது.
 
மூன்றாவது டெஸ்ட் - அஹமதாபாத்தில் பிப்ரவரி 24-ம் தேதி மதியம் 2.30 மணிக்குத் தொடங்கிறது. இது இரவு பகல் பிங்க் பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 28-ம் தேதி நிறைவடைகிறது.
 
நான்காவது டெஸ்ட் - அஹமதாபாத்தில் மார்ச் 04-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. மார்ச் 08-ம் தேதி நிறைவடைகிறது.
 
இந்தியா vs இங்கிலாந்து டி20 போட்டிகள்:
அனைத்து போட்டிகளும் அஹமதாபாத்தில் நடக்கவிருக்கின்றன.
 
முதல் டி20 - மார்ச் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிறது
 
இரண்டாவது டி20 - மார்ச் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிறது
 
மூன்றாவது டி20 - மார்ச் 16-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிறது
 
நான்காவது டி20 - மார்ச் 18-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிறது
 
ஐந்தாவது டி20 - மார்ச் 20-ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்கிறது
 
இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் போட்டிகள்:
அனைத்து போட்டிகளும் புனேவில் நடக்கவிருக்கின்றன. எல்லாமே பகலிரவுப் போட்டிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
முதல் ஒரு நாள் போட்டி - மார்ச் 23-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.
 
இரண்டாவது ஒரு நாள் போட்டி - மார்ச் 26-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.
 
மூன்றாவது ஒரு நாள் போட்டி - மார்ச் 28-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு தொடங்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments