Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எவ்வாறு சறுக்கியது?

Webdunia
வியாழன், 14 நவம்பர் 2019 (17:52 IST)
இது எதேச்சையாக அமைந்த ஒன்றாகக்கூட இருக்கலாம். அயோத்தி சர்ச்சையை காங்கிரஸ் கட்சி அளவுக்கு பழமையானது என்று கூறலாம்.
1885ஆம் ஆண்டு முதன்முதலாக இந்து அமைப்புகள் பிரிட்டிஷாரிடம் அயோத்தியில் கோயில் கட்ட ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
 
அதே கால கட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற கட்சி தனது தொடக்கக் கூட்டத்தை நடத்தியது.
 
சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸின் நிலைப்பாடு, இரண்டு தரப்பாக இருந்தது. முதலில் பழமைவாத காங்கிரஸ் தலைவர்கள். இந்த வகையினர் பெருமளவில் இருந்தனர்.
 
ஆனால் அவர்களின் பழமைவாதம் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிராகவோ அல்லது முஸ்லிம்களுக்கு எதிரானதாகவோ இல்லை. முஸ்லிம்களை துன்புறுத்தாமல் இந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கலாம் என்று அவர்கள் நம்பினர்.
 
கோவிந்த் பஹாலாபால் வழிநடத்தப்பட்ட இவர்கள், தங்களின் சிறந்த வழிமுறைகளை நேர்மையாக நம்பினர்.
இரண்டாம் குழு சர்தார் வல்லபாய் படேலால் வழிநடத்தப்பட்டது. சுதந்திர இந்தியா என்பது நவீனமாக இருக்க வேண்டும் என்று இவர்கள் நம்பினர். மேலும் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை என்று கருத்தில் கொள்ளாமல் பொதுவானதொரு சட்டம் வகுக்கப்பட வேண்டும் என இவர்கள் உறுதியாக நம்பினர்.
 
எனவே 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22-23, ஃபைசாபாத்தில் உள்ள பாபர் மசுதியில் ராமரின் சிலைகளை வைத்த போது பண்டால் தலைமை வகித்த ஐக்கிய மாகாண அரசு, (இன்றைய உத்தரபிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 'யுனைடெட் பிராவின்ஸ்') பிரச்சனையை உருவாக்கிய இந்துக்களுடன் ஒத்து போயினர். ஆனால் இது படேலுக்கு பிடிக்கவில்லை அவர் ஜனவரி 9ஆம் தேதி 1950ஆம் ஆண்டு பண்டுக்கு கடிதம் எழுதினார்.
 
நவீன இந்தியாவின் முதல் கோட்பாட்டை படேல் வலியுறுத்தினார்.
 
"இம்மாதிரியான சர்ச்சைகளை வலுகட்டாயமாக தீர்க்க முடியாது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைதியை நிலைநாட்ட பயன்படுத்தப்பட வேண்டும் அமைதியான மற்றும் இணக்கமான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும், ஆக்கிரமிப்பு அல்லது வற்புறுத்தலின் அணுகுமுறையின் அடிப்படையில் ஒருதலைபட்சமான எந்தவொரு நடவடிக்கையும் எதிர்க்க முடியாது," என்றார்.
 
அது சுதந்திர இந்தியாவின் தொடக்க நாட்கள் அந்த சமயங்களில் தலைவர்கள் கவனம் செலுத்த புகழ்பெற்ற சர்ச்சைகளை காட்டிலும் பல முக்கிய விஷயங்கள் பல இருந்தன.
 
அந்த சமயத்தில் தேசிய தலைவர்கள் புதிய அரசமைப்பை வடிவமைக்கும் கடைசி கட்ட பணியில் இருந்தனர். மேலும் வரக்கூடிய புதிய மதச்சார்பற்ற கொள்கைகள் பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என அவர்கள் உறுதியாக நம்பினர்.
 
எதிர்பார்த்ததுபோல் அயோத்தியில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே என்ன இருந்ததோ அதே நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டது.
 
சர்ச்சைக்குரிய நிலம் பூட்டப்பட்டது. நேருவின் இந்தியா உருவாக தொடங்கியது.
 
தாராளமயம், சமத்துவம், பன்மைத்துவம் மற்றும் மதச்சார்பற்ற தன்மையுடைய நடைமுறைகள் ஆகியன, ஒரு வகையான வெல்லமுடியாத அறிவுசார் தன்மையை பெற்றன.
 
இந்து மகாசபா மற்றும் பாரதிய ஜன சங் போன்ற வகுப்புவாத குழுக்கள் இந்து பெரும்பான்மையின் குரல்களாக தங்களை நிறுத்திக் கொள்ள முடியாமல் போயின.
 
1952ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அவர்களால் சொற்ப வாக்குகளையே பெற முடிந்தது. மாறாக இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு நிலையான இடத்தில் இருந்தது. தேர்தல்களிலும் வெற்றிப் பெற்றது. பெரும்பான்மை மக்களின் கட்சியாக அது இருக்க விரும்பினாலும் முஸ்லிம் தலைவர்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் அங்கு இடம் இருந்தது.
 
காங்கிரஸ் வலுவாகவும், ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்த வரையில், மதச்சார்புள்ள குழுக்கள் நாட்டில் பெரிதாக செயல்பட முடியவில்லை. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட தலைமை பொறுப்பு சர்ச்சைகளால் அது மதச்சார்பற்ற தன்மையை இழக்க தொடங்கியது.
 
இந்திரா காந்தி மன்னர் மானிய முறையை ஒழித்தததை இந்து வகுப்புவாத கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டன. மேலும் இந்து அமைப்புகள் மற்றும் ராஜ பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்து கொண்டது நேருவின் கொள்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால் இந்திரா காந்தி அதை ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளைக் கொண்டு மதச்சார்பற்ற குடியரசை நிறுவினார்.
 
ராஜிவ் காந்தி பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பிறகு காங்கிரஸ் மதச்சார்பற்ற நாடு குறித்த தனது கொள்கைகள் குறித்த தெளிவை இழக்க தொடங்கியது.
 
 
இளமையான மற்றும் பெரிதும் அரசியல் அனுபவம் இல்லாத, பிரதமரான ராஜீவ் காந்தி, காந்தி மற்றும் நேரு விட்டுப்போன மகத்தான பாரம்பரியம் குறித்த தெளிவு இல்லாதவர்களின் அறிவுரைகளை பெற்றார்.
 
இந்திரா காந்தியால் விலக்கி வைக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது.
 
அந்த அறிவுரைகளால் 1984ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைக்கு ஆதரவாக வெளிப்படையாக தெரிந்தது. பாஜக பொதுத் தேர்தலில் இரண்டே இரண்டு இடங்களை மட்டும் பெற்றிருந்தாலும், ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தது.
 
எனவே சங் பரிவார அமைப்புகள் காங்கிரஸால் முடியும் என்றால் தங்களால் ஏன் முடியாது என்று யோசித்தன.
 
ஷா பானு சம்பவம் நடைபெற்றது. பிப்ரவரி 1986ஆம் ஆண்டு அயோத்தியா சம்பவம் நடைபெற்றது. தீடிரென மத விவாதங்கள், மத தலைவர்கள், மற்றும் மத ரீதியான கூட்டம் கூட்டுதல் ஆகியவை மரியாதை பெற தொடங்கின.
 
ராஜீவ் காந்தியின் தவறுகளும், தவறான கணக்குகளும், அயோத்திய விவாதங்களுக்கு மீண்டும் வழி வகுத்தன.
 
இந்திரா காந்தியின் அரசியல் செயலராக இருந்த எம்.எல்.ஃபொடேதார் தனது "The Chinar Leaves", புத்தகத்தில் வருத்தமுடன் இவ்வாறு குறிப்பிட்டிருப்பார்: இந்திரா காந்தியுடன் நெருக்கமாக பணியாற்றியதில் ராஜீவ் காந்தி ஏன் நேரு மற்றும் காந்தி குடும்ப அம்சத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத செயல்களை செய்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
 
ராஜீவ் காந்தி சிறிய தந்திரோபாய நன்மைகளுக்கு காத்திருந்த வேளையில், இந்த நிலம் இந்துக்களுக்கே சொந்தம்; அரசமைப்பு இந்துக்களை திருப்தியடைய செய்யும் விதமாக அமைய வேண்டும் என்ற பழைய விஷயத்தை சங் பரிவார் தோண்டி எடுக்க தீர்கமாக இருந்தது.
 
ராஜீவ் காந்திக்கு பிறகு காங்கிரஸ் தலைவராகவும் அதன்பின் பிரதமராகவும் வந்த பி.வி.நரசிம்ம ராவுக்கு இந்தியாவின் சரிந்துள்ள மற்றும் திவாலான பொருளாதாரத்தை சீர் செய்வதே முதன்மை கடமை என புரிந்தது.
 
போராடுவதற்கான வலிமை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே அவருக்கு கிடைக்கவில்லை. எனவே அந்த மதக்குழு அயோத்தியில் ஈடுபட்ட நடவடிக்கைகளை அவரால் தடுக்க முடியவில்லை. அது டிசம்பர் 6, 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்கு வித்திட்டது.
 
அந்த சமயத்திலிருந்து காங்கிரஸ் கட்சி பாஜக மற்றும் அதன் வகுப்புவாத கோட்பாடுகளை தடுக்க தனது மதச்சார்பற்ற கொள்கைகளை முன் வைக்க தவறிவிட்டது. அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை கை காட்டியது காங்கிரஸ். மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கருத்து சொல்வதற்கு எளிமையாகவும் இருந்தது.
 
2014ஆம் ஆண்டுக்கு பிறகு, தன்னை ஒரு இந்து இல்லாத கட்சியாக பிரகடனப்படுத்தியதால் தான் இந்த தோல்வி என காங்கிரஸ் கூறியது.
 
எனவேதான் தற்போது வந்த அயோத்தி தீர்ப்பை ஏற்பதை தவிர காங்கிரஸுக்கு வேறு வழியில்லை. ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்துக்கு தற்போது காங்கிரஸ் அனுபவித்து கொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments