Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துனீசியாவில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலி

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (18:07 IST)
துனீஷியாவில் உள்ள சுஸ் நகரில், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஒரு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 27 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

தாக்குதல் நடத்திய ஒரு துப்பாக்கிதாரி கொல்லப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

துனீசியாவில் சுஸ் நகரம் சுற்றுலாப் பயணிகள் பெரிய அளவில் வருகைதரும் நகரமாகும்.

துனீஷியாவின் தலைநகரான துனிசில் கடந்த மார்ச் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலாப் பயணிகள். இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது.

பிபிசியிடம் பேசிய அந்நாட்டின் உள் துறை அமைச்சர், தற்போது பயங்கரவாதத் தாக்குதல் நடந்துவருவதாகவும் சிலர் இறந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

Show comments