Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு திராட்சை மதுவை தயாரிக்க வழங்கப்பட்ட உரிமம் பீகாரில் ரத்து

Webdunia
புதன், 27 ஜூலை 2016 (03:35 IST)
இந்தியாவின் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு திருப்பலியில் பயன்படுத்தப்படும் திராட்சை மதுவை தயாரிக்க வழங்கப்பட்ட உரிமத்தினை ரத்து செய்துள்ளது.



 

கிறிஸ்துவ மத சேவையான திருப்பலி அல்லது நற்கருணையின் போது இந்த மது பயன்படுத்தப்படும்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பீகாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது மது விற்பனை மற்றும் நுகர்வுக்கு விதிக்கப்பட்ட தடையின் நீட்சியாக கிறிஸ்துவ தேவாலயங்களில் புனித மதுவை தயாரிக்கும் உரிமம் ரத்து செய்துள்ள நடவடிக்கை வந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் அளிக்கப்படும் திருப்பலி ஒயினை (மதுவை) தயாரிக்கும் மது தயாரிப்பு கூடத்தின் பொறுப்பாளராக உள்ள ஒரு மத குரு இது குறித்து பிபிசியிடம் கூறுகையில், இந்த விஷயத்தில் அரசுடன் சமரசம் எட்டப்படும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

தற்போதைய செயல்முறையை தொடர்ந்து கடைப்பிடித்து, தயாரிக்கும் மதுவை, ஒயின் என்றழைக்காமல் திராட்சை சாறு என்று அழைத்துக் கொள்ளலாமா என்று ஒரு கருத்து உலவுவதாக கூறப்படுகிறது.

 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments