Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனின் இயல்பையே மாற்றும் பிளாஸ்டிக்

மீனின் இயல்பையே மாற்றும் பிளாஸ்டிக்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (22:11 IST)
கடலில் அதிக அளவு சிறிய பிளாஸ்டிக் துகள்கள் செறிந்து கிடப்பது, கடலிலுள்ள இளம் மீன்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவை தெரிவுச் செய்வதில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தி பேரழிவை விளைவிக்கின்றன என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 

 
பதின்ம வயதினர் நல்ல உணவு இருந்தும் ஆரோக்கியமற்ற உணவை தெரிவு செய்வதைப் போல, பெர்ச் மீன் குஞ்சுகள் வழக்கமாக உண்கின்ற சாதாரண மிதவை உயிரினங்களை உண்பதற்கு பதிலாக சிறிய பிளாஸ்டிக் துண்டுகளை விரும்புகின்றன.
 
இதனால் அவை மெதுவான இயக்கமுடையவையாகி, உருவத்தில் சிறியவையாகி, எளிதில் இரைக்காக தாக்குதலுக்கு உள்ளாகும் மீன்களாக மாறிவிடுகின்றன.
 
கடலிலும், பெருங்கடலிலும் இறுதியாக வந்து சேரும் ஒப்பனைப் பொருட்களிலும், சோப்புக்களிலும் கலந்துள்ள நுண்ணிய பிளாஸ்டிக் மணிகள் பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் வாதத்திற்கு இந்த ஆய்வு முடிவுகள் வலுசேர்ப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
மொத்தமாக எட்டு மிலியன் டன்கள் எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலக்கின்றன.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்வாணமாக சாப்பிட புதுமையான ஹோட்டல்