Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக.26-ல் ஈலோன் மஸ்க் vs மார்க் சக்கர்பெர்க் குத்துச்சண்டையா? இருவரும் என்ன சொல்கிறார்கள்?

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (19:18 IST)
இருவரும் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்பது குறித்த வினோதமான யோசனை கடந்த ஜுன் மாதம் தொடங்கியது.
 
தன்னுடன் குத்துச் சண்டையில் பங்கேற்பதில் ஈலோன் மஸ்க் "தீவிரமாக இல்லை" என்றும், "இது அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டிய நேரம்" என்றும் மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார்.
 
அவரது சமூக ஊடக தளமான த்ரெட்ஸில் அவர் வெளியிட்ட பதிவில், ஈலோன் மஸ்க்குடன் குத்துச் சண்டை விளையாட அவருக்கு "உண்மையாகவே ஒரு தேதியை" வழங்கியதாகவும், ஆனால் போட்டியாளர் மஸ்க் சாக்குப்போக்குகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மார்க் சக்கர்பெர்க் உடன் குத்துச்சண்டை போட்டியில் திங்கள் கிழமை பங்கேற்கத் தயாராக இருப்பதாக முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஈலோன் மஸ்க் ஞாயிற்றுக்கிழமையன்று பதிவிட்டிருந்தார்.
 
இதுபோன்ற ஒரு குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்க, கடந்த ஜுன் மாதமே இரண்டு கோடீஸ்வர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்களுடைய இந்த அறிவிப்பு உலக ஊடகங்களின் கவனத்தைப் பெரிய அளவில் ஈர்த்தது.
 
ஆனால் இந்தப் போட்டிக்கான தேதியை நிர்ணயிப்பதில் ஒருவருக்கு ஒருவர் பல காரணங்களைக் கூறி தாமதப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இதனால் உண்மையிலுமே இருவரும் குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
ஆகஸ்ட் 26ஆம் தேதி குத்துச் சண்டை போட்டியை வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் அறிவித்தார்.
 
மெட்டா நிறுவனம் டிவிட்டருக்கு போட்டியாக ஜூலையில் த்ரெட்ஸ் என்ற சமூக ஊடகத்தை அறிமுகப்படுத்தினார். அது ஒரே வாரத்தில் 10 கோடி பயனர்களைப் பெற்றது. அப்போதிருந்து இந்தப் போட்டி தொடர்பாக இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் அதிகரித்துக்கொண்டே வந்தது.
 
இதற்கிடையே, த்ரெட்ஸ் சமூக ஊடகத்திற்கு புதிய பயனர்களின் எண்ணிக்கை அந்த அளவுக்குத் தொடர்ந்து அதிகரிக்கவில்லை. அதே நேரம் முன்னர் டிவிட்டர் என்ற பெயரில் செயல்பட்டு வந்த எக்ஸ் சமூக ஊடகம் 35 கோடி பயனர்களுடன் வலுவான முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், டிவிட்டரின் வர்த்தக ரகசியங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் மீது வழக்குத் தொடரப்போவதாக ஈலோன் மஸ்க் அச்சுறுத்தியுள்ளார். ஆனால் அவரது குற்றச்சாட்டுக்களுக்கு மெட்டா மறுப்பு தெரிவித்துள்ளது.
 
ஆகஸ்ட் 26ஆம் தேதி குத்துச் சண்டை போட்டியை வைத்துக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் மார்க் சக்கர்பெர்க் அறிவித்தார். பிறகு வெள்ளிக்கிழமையன்று, இத்தாலியின் கலாசார அமைச்சர், ஈலோன் மஸ்கிடம் அந்த குத்துச்சண்டையை பொதுத் தொண்டுகளுக்கு வருவாய் ஈட்டித் தரும் வழியில் நடத்துமாறு கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
 
 
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் இதற்குப் பதிலளித்த ஈலோன் மஸ்க், மெட்டாவின் மார்க் சக்கர்பெர்க்கை ஒரு "கோழி" என்று விமர்சித்திருந்தார்.
 
இந்நிலையில், இதுபோன்று குத்துச்சண்டையில் ஈடுபடுவது, "ஒரு பண்டைய ரோம் நகரை நினைவூட்டும் நிகழ்ச்சியாக இருக்கும்," என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
 
இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை மெட்டா நிறுவனத் தலைவர் தமது த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில், "ஈலோன் மஸ்க் தேதியை உறுதிப்படுத்த மாட்டார். அவர் போதுமான அளவுக்கு பயிற்சியைப் பெறவில்லை என நினைக்கிறேன்," என்று அவர் கூறியிருந்தார்.
 
"ஈலோன் மஸ்க் எப்போதாவது உண்மையான தேதி ஒன்றை அளிக்க விரும்பி, அதிகாரப்பூர்வமாக விளையாட்டில் ஈடுபடுவதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டால், அதை அவர் என்னிடம் தெரிவிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன.
 
ஆனால் அவர் விளையாட விரும்பவில்லை என்றே நான் நினைக்கிறேன். அப்படி அவர் விளையாட விரும்பவில்லை என்றால், நான் பிற போட்டியாளர்களுடன் விளையடும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்போகிறேன்."
 
இருப்பினும், எக்ஸ் சமூக ஊடக தளத்தில் இதற்குப் பதிலளித்த ஈலோன் மஸ்க், மெட்டாவின் மார்க் சக்கர்பெர்க்கை ஒரு "கோழி" என்று விமர்சித்திருந்தார்.
 
 
முன்னதாக, தனக்கும் மார்க் சக்கர்பெர்க்கிற்கும் இடையே இந்த விளையாட்டுப் போட்டி கண்டிப்பாக நடைபெறும் என எக்ஸ் ஊடகத்தில் மஸ்க் தெரிவித்திருந்தார்.
 
அதில் அவர், திங்களன்று மெட்டாவின் தலைமையகமான பாலோ ஆல்டோவுக்கு செல்லப் போவதாகவும், அங்கே இருக்கும் விளையாட்டு மைதானத்தின் மேடையில் குத்துச் சண்டையில் ஈடுபடப் போவதாகவும் கூறியிருந்தார்.
,
மார்க் சக்கர்பெர்க், ஏற்கெனவே பல தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று, அண்மையில் ஜியு-ஜிட்சு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
 
மேலும், "இன்று லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் [கணினி விஞ்ஞானி மற்றும் போட்காஸ்ட்களை நடத்துபவர்] ஒரு சிறிய போட்டியைத் தவிர, நான் அதிகம் பயிற்சி செய்யவில்லை," என்றும் தெரிவித்திருந்தார்.
 
"உண்மையில் இது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். எங்களுக்குள் பெரும் வித்தியாசம் உள்ளது. ஒருவேளை நீங்கள் ஒரு நவீன கால புரூஸ் லீயாக இருருக்கலாம். எப்படியாவது இந்த விளையாட்டில் வெற்றி பெறலாம்," என்றும் ஈலோன் மஸ்க் கூறியிருந்தார்.
 
52 வயதான எலோன் மஸ்க் மற்றும் 39 வயதான மார்க் சக்கர்பெர்க் ஆகிய இருவரும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரத் தொழில் அதிபர்களில் இருவராக இருக்கின்றனர்.
 
ஈலோன் மஸ்க், சக்கர்பெர்க்குடன் "குத்துச் சண்டைக்குத் தயாராக இருப்பதாக" ஜூன் மாதத்தில் டிவிட்டரில் ஒரு செய்தியைப் பதிவிட்ட போது, இருவரும் அந்தச் சண்டையில் ஈடுபடுவதற்கான வினோதமான யோசனை உருவானது.
 
ஏற்கெனவே பல தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்று, அண்மையில் ஜியு-ஜிட்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மெட்டா (ஃபேஸ்புக்) முதலாளி, "குத்துச் சண்டைக்கு நான் தயார். எங்கே விளையாடுவது? இடத்தை எனக்கு அனுப்பவும்," என்று சாதாரணமான ஒரு பதிலை நறுக்கென்று தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments