Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் ஐபோனை இதயத்துக்கு அருகே கொண்டு செல்லாதீர்கள் - எச்சரிக்கை

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (08:11 IST)
உடலுக்குள் பொருத்தப்பட்டு இருக்கும் பேஸ்மேக்கர்கள் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்கள் போன்ற மருத்துவ சாதனங்களிலிருந்து, சில ஆப்பிள் நிறுவனத்துக்குச் சொந்தமான தயாரிப்புகளை பாதுகாப்பான தொலைவில் வைக்குமாறு ஆப்பிள் நிறுவனமே அறிவித்து இருக்கிறது.
 
ஆப்பிள் நிறுவன சாதனங்களில் எந்த மாதிரியானவைகளை எல்லாம் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என ஆப்பிள் நிறுவனம் தன் வலைதளத்திலேயே பட்டியலிட்டு இருக்கிறது.
 
இதில் ஏர்பாடுகள் மற்றும் சார்ஜிங் கேஸ்கள், ஆப்பிள் வாட்ச் மற்றும் அதன் உதிரி பாகங்கள், ஹோம்பாடுகள், ஐபேடுகள், ஐபோன் மற்றும் மேக் சேஃப் உதிரிபாகங்கள், மேக் மற்றும் அதன் உதிரி பாகங்கள், பீட்ஸ் என பல்வேறு கருவிகளையும் மருத்துவ சாதனங்களை பொருத்திக் கொண்டவர்கள் பாதுகாப்பான தொலைவில் வைக்க வேண்டும் என பட்டியலிட்டு இருக்கிறது.
 
குறிப்பிட்டு எந்த வகையான ஐபோன்கள், மேக் புக் மடிக் கணிணிகள் இந்த பட்டியலில் இருக்கின்றன என்பதை இந்த இணைப்பில் காணலாம்:
 
இதில் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக விற்பனையாகி வரும் ஆப்பிள் ஐபோன் 12 ரகங்கள், ஆப்பிள் மேக்புக் ஏர், ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ போன்றவைகளும் அடக்கம்.
 
மேக்ரூமர்ஸ் என்கிற வலைதளம் தான் முதலில் இப்பட்டியலைக் கண்டுபிடித்தது, அதோடு ஐபோன் 12 மருத்துவ சாதனங்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சியையும் குறிப்பிட்டது.
 
ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மேக் சேஃப் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தம், மருத்துவ சாதனங்களின் செயல்பாட்டில் தலையிடலாம் என்கிற ஆராய்ச்சி, ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் என்கிற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
 
ஆப்பிள் நிறுவனத்தின் மேக்சேஃப், அதிவேக வொயர்லெஸ் சார்ஜிங்குக்கு உதவுகிறது.
ஆப்பிள் ஐபோன் 12-ல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தத்தின் வலிமையைக் கண்டு தாங்கள் ஆச்சர்யப்பட்டு போனதாக, அவ்வாராய்ச்சியின் முதன்மை ஆய்வாளர்கள் முனைவர் மைக்கெல் வூ பத்திரிகையாளர்களுக்கான செய்திக்குறிப்பு ஒன்றில் எழுதியுள்ளார்.
 
"பொதுவாக, காந்தங்கள் பேஸ்மேக்கர் போன்றவைகளின் நேரத்தை பாதிக்கலாம் அல்லது பொருத்தப்பட்டிருக்கும் டீஃப்ரெபிலேட்டரை செயலிழக்கச் செய்யலாம். அது பொருத்தப்பட்டிருப்பவரின் உயிரைக் காக்கும் செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. இதயம் சார்ந்த மருத்துவக் கருவிகளின் செயல்பாட்டை, எலெக்ட்ரானிக் கருவிகளில் பொருத்தப்பட்டிருக்கும் காந்தங்கள் பாதிக்கலாம் என்பதை அனைவரும் அவசரமாக உணர வேண்டும் என்பதை இவ்வாராய்ச்சி உணர்த்துகிறது"
 
எத்தனை தூரம் தொலைவாக வைக்க வேண்டும்?
ஆப்பிள் நிறுவனம் பட்டியலிட்டு இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை, மருத்துவ் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறு அங்குலம் (15 சென்டிமீட்டர்) தொலைவாக வைக்க வேண்டு என குறிப்பிட்டு இருக்கிறது. ஒரு வேளை வொயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட சாதனங்கள் என்றால் 30 சென்டிமீட்டர் இடைவெளி விட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறது.
 
ஏன் இந்த தொலைவு?
பொதுவாகவே எலெக்ட்ரானிக் பொருட்களில் காந்தங்கள் பொருத்தப்பட்டு இருக்கும், அது மருத்துவ உபகரணங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
 
சில ஆப்பிள் வாட்சுகள் நம் உடலின் எலெக்ட்ரோ கார்டியோகிராமை எடுக்கும் திறன் கொண்டது. அதில் மின்சார சிக்னலின் நேரம் மற்றும் வலிமை தான் மனிதர்களின் இதயத் துடிப்பைத் தீர்மானிக்கிறது.
 
சில நேரங்களில் காந்தங்கள் மற்றும் மின்காந்த விசையினால் மருத்துவ கருவிகளின் செயல்பாடுகளில் தலையீடுகள் ஏற்படலாம் என்கிறது ஆப்பிள்.
 
உதாரணமாக மனிதர்களின் உடலில் பொருத்தப்படும் பேஸ்மேக்கர் மற்றும் டீஃப்ரெபிலேட்டர்களில் சென்சார்கள் இருக்கலாம், அதில் காந்தங்கள் மற்றும் ரேடியோக்களோடு தொடர்பு ஏற்படும் போது அதன் செயல்பாடுகள் மாறலாம்.
 
ஆக்சிஜன் அளவு குறைந்தால் செல்போனில் எச்சரிக்கை - விழுப்புரம் இளைஞரின் புதிய கண்டுபிடிப்பு
வேற்று கிரக வாசிகள் உலகம் இருக்கிறதா? அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா
மற்ற நிறுவன தயாரிப்புகள் இருக்கின்றனவா?
ஆப்பிளைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனத்தின் கெலாக்ஸி எஸ் 21 சீரிஸ் போன்களில் உள்ள காந்தங்கள் மனிதர்களின் உடலில் இருக்கும் மருத்துவ கருவிகளின் செயல்பாட்டை பாதிக்கலாம். இது தொடர்பாக மருத்துவர்களை அணுகுமாறு சாம்சங் தன் வலைதளத்தில் கூறியுள்ளது.
 
இணைப்பு: https://www.samsung.com/hk_en/support/mobile-devices/do-galaxy-s21-series-affect-to-medical-devices/
 
ஹூவாவே நிறுவனத்தின் அணிந்து கொள்ளக் கூடிய சாதனங்கள் ரேடியோ அலைவரிசையை உண்டாக்கலாம். இந்நிறுவனத்தின் சார்ஜ் செய்யும் சாதனங்களில் சிலவற்றில் காந்தங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது உடலில் பொருத்தப்படும் மருத்துவ சாதனங்களின் செயல்பாட்டை பாதிக்கலாம்.
 
பேஸ்மேக்கர்கள், உடலில் பொருத்தப்படும் கோஹெலர் வைப்புகள், காதுகேட்கும் கருவிகள், டீஃப்ரெபிலேட்டர் போன்ற பொருட்களை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஹுவாவே நிறுவனத்தை தொடர்பு கொண்டு தேவையான கூடுதல் விவரங்களைப் பெறுமாறு கூறியுள்ளது அந்நிறுவனம். மேலும் ஹுவாவேயின் அணிந்து கொள்ளும் பொருட்களை தடை செய்யப்பட்ட பகுதிகளில் பொருத்தி பயன்படுத்த வேண்டாம் எனவும் தன் வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.
 
இணைப்பு: https://consumer.huawei.com/ie/support/content/en-us01057408/
 
பேஸ்மேக்கர் ஆராய்ச்சி
 
மேரி மொய்க்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. அவர் நிமோனிக் (Mnemonic) என்கிற நிறுவனத்தில் கணிணி பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வருகிறார். அவர் இந்த தொழில்நுட்பம் குறித்து ஆராய்ந்துவிட்டு, தான் இது குறித்து கவலை கொள்ளவில்லை என்கிறார்.
 
"இந்த ஆப்பிள் சாதனங்கள் அத்தனை அதிக காந்த விசையை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் கச்சேரிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் அல்லது வெல்டிங் இயந்திரங்களுக்கு அருகில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட ஒருவர் செல்லும் போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்" என்கிறார் அவர்.
 
ஆப்பிள் ஐபோன் 12-ல் பயன்படுத்தப்பட்டு இருக்கும் காந்தங்களால், பேஸ் மேக்கர்களை பாதுகாப்பு மோடுக்கு மாற்ற முடியும். அந்த மோடுக்கு பேஸ் மேக்கர் மாறினாலும், தொடர்ந்து செயல்படும். ஐபோனை நீக்கிவிட்டால் மீண்டும் பேஸ் மேக்கர் தன் போக்கில் செயல்படத் தொடங்கும் என்கிறார் மேரி.
 
"ஒருவருக்கு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு இருக்கிறது என்றால் கூட அவர் தாராளமாக ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்தலாம். பேஸ்மேக்கருக்கு அருகிலிருந்து போன்கள் நீக்கப்பட்ட உடனேயே பேஸ்மேக்கர்கள் மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கும்" என்கிறார் பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்கிற அமைப்பின் மூத்த இருதய செவிலியர் ஜோ விட்மோர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments