Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர்

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (16:09 IST)
தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை இயல்பு நிலை திரும்பாது - ஸ்பெயின் பிரதமர்

ஸ்பெயினில் 24 மணி நேரத்தில் சுமார் 5,100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

எனினும் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.

இதுவரை ஸ்பெயினில் 1,77,633 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 18,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இத்தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, வாழக்கை இயல்பு நிலைக்கு திரும்பாது என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்தார்.

இந்த வாரத் தொடக்கத்தில் அங்கு தொழிற்சாலைகள், கட்டுமானம் ஆகிய தொழில்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

டென்மார்க்கில் தளர்த்தப்படும் கொரோனா கட்டுப்பாடுகள்

டென்மார்க்கில் அமல்படுத்தப்பட்டிருந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தளர்த்தும் வகையில், முதல் கட்டமாக அந்நாட்டின் நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன.

புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், கூடிய விரைவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போபால் விஷவாயு விபத்தில் பிழைத்த 5 பேர் கொரோனாவால் பலி

ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய 1984ல் நடந்த போபால் விஷவாயு விபத்தில் தப்பிப் பிழைத்த 5 பேர் தற்போது கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலகின் மோசமான அந்த விபத்தில் இருந்து பிழைத்த பலருக்கும் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகள் இருப்பதால், இந்த வைரஸ் தொற்றால் இவர்களுக்கு 5 மடங்கு அதிக ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது போபாலில் இறந்த 5 பேருமே விஷவாயு விபத்தில் இருந்து தப்பியவர்கள் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..! 35 பேரின் மனுக்கள் நிராகரிப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments